பல்கலைக்கழக விண்ணப்பம் மேலும் நீடிப்பு!

இலங்கையின் பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தினம் நேற்று முந்தினத்துடன் நிறைவடைந்தது.

எனினும் விண்ணப்பிக்காதவர்களுக்கு பயணத்தடை முடிந்ததும் சில தினங்கள் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.

நேற்றுமுன்தினத்துடன் ஒன்லைன் விண்ணப்பத் திகதி முடிவடைந்தாலும் விண்ணப்பித்தவர்கள் இன்றிலிருந்து ஒரு மாதம் வரை தமது கற்கை நெறி தொடர்பான விருப்பொழுங்கை மாற்றிக் கொள்ளலாம். இது வழமையான ஒரு நடைமுறையாகும்.

ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது எதிர்நோக்குகின்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளை 1919 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்னர் வழங்கப்படவிருக்கும் காலப் பகுதியில் மாணவர்கள் பின்வரும் தகவல்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

1.பெயர்
2.முகவரி
3.தொலைபேசி இல.
4.AL சுட்டெண் (முன்னைய AL சுட்டெண்கள்)
5.OL சுட்டெண்கள் (ஆண்டுகளுடன்)
6.பாடசாலையில் சேர்ந்த திகதி
7.தந்தையின் முழுப்பெயர்
8.தாயின் முழுப்பெயர்
9.அடையாள அட்டையின் 2 பக்க இமேஜ்
10.கற்கை நெறிகளின் விருப்பு முன்னுரிமை

தனிப்பட்ட பரீட்சார்த்திகள்
1.பாடசாலை விடுகைப் பத்திரத்தையும்
2.கிராம சேவகரின் வதிவிட சான்றிதழையும்
பயணத்தடை நீங்கியதும் பிறகு பெற்று அனுப்பலாம்.

அதேவேளை ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் பின்வருமாறு செயற்படுங்கள்.

  1. உங்களது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தேசிய அடையாள அட்டையின் ‘ஸ்கேன்’ பிரதியுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தரவுத் தளத்திற்கு ‘ஒன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். அதற்கான இறுதித் தினமே நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
  2. அதன் pdf வடிவம் உங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும். அதனை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொள்ளுங்கள். (6 பக்கங்கள்)
  3. அப்பிரதியின் 3 மற்றும் 4 ஆம் பக்கங்களில் திகதியும் கையொப்பமும் இட்டு (முடிந்தால்) அதிபரின் கையொப்பத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
  4. க.பொ.த. (சா/த) பரீட்சைப் பெறுபேற்றை போட்டோ பிரதி (Photo copy) எடுத்து அதிபரிடம் அல்லது சமாதான நீதவானிடம் கையொப்பம் பெறுங்கள்.

6.அதன் இரு பக்க மேல் வலது புறத்தில் ‘பிரிண்ட்’ எடுத்த உரிய ‘பார் கோட்’ களை ஒட்டிக் கொள்ளுங்கள்.

  1. இப்போது விண்ணப்பப்படிவப் பிரதிகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ‘ஸ்கேன்’ செய்து அல்லது ஒழுங்கான போன் கெமராவில் (Phone Camera) போட்டோ எடுத்து அவற்றை [email protected] எனும் ஈ மெயில் முகவரிக்கு (முடிந்தால்) உங்கள் ஈ மெயிலிலிருந்து அனுப்பி வையுங்கள்.
  2. பின்னர் அவற்றை A4 கவரிலிட்டு பதிவுத் தபாலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

The Senior Assistant Secretary
(University Admissions),
University Grants Commission,
20, Ward Place,
Colombo 7.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மேலதிகமாக,

  1. விண்ணப்பப் பத்திரத்தின் 5 ஆம் பக்கத்திலும் கையொப்பமிட்டு சமாதான நீதவானிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள்.
  2. GS இன் வதிவிடச் சான்றிதழ், பாடசாலையின் அல்லது மத்ரசாவின் விடுகைப் பத்திரம் ஆகியவற்றின் ஒரிஜினல் ஆவணங்களின் இரு பக்க மேல் வலது புறத்தில் ‘பிரிண்ட்’ எடுத்த உரிய ‘பார் கோட்’ களை ஒட்டிக் கொள்ளுங்கள்.

விண்ணப்பித்தவர்கள் ஈ மெயில் முகவரி (ID), பாஸ்வேட் மற்றும் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஒன்லைன் பாஸ்வேட் ஆகிய மூன்றையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இவற்றை பிறருக்கு காண்பிப்பதைத் தவிர்ப்பதுடன் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யும் வரை மிகக் கவனமாக வைத்திருங்கள். அவ்வாறே குறித்த தொலைபேசி இலக்கமும் இறுதி வரை முக்கியமானது.

Previous articleவவுனியா பூந்தோட்டம் மின் மயானத்தில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை இலவசமாக தகனம் செய்ய நடவடிக்கை!
Next articleஅம்பாறையிலும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!