அம்பாறையிலும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட இரசாயனக் கசிவினையடுத்து அம்பாறை மாவட்டத்தில் மேலும் சில கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவனை பகுதியில் நேற்று மூன்று கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடந்த மாதம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து இதுவரை 40 க்கும் மேற்பட்ட ஆமைகளும் குறைந்தது 5 டொல்பின்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.