மன்னார் மாந்தை மேற்கு பகுதியில் நிலங்களை சுவிகரித்த சிங்கள இராணுவம் முயற்சி!

மன்னார் மாந்தை மேற்கு  ,  பெரியமடு சன்னார் ஈச்சளவக்கை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற பொதுமக்களின் பல நூறு ஏக்கர் காணிகளை பேரினவாத இராணுவத்தினர் அபகரித்து வேலி அடைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தினர் வேலி அடைத்து வரும்  காணிகளுக்குள் பொதுமக்களுடைய மயானங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் குளங்கள் சிறுவர் பூங்கா மற்றும் கடைத் தொகுதிகள் பழைய கட்டிடங்கள் போன்றவை இருப்பதாகவும்  அப்பகுதி  மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த கொரோனா பயண தடைய பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில்  சிங்கள இராணுவத்தினர் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.