நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

இதேவேளை ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த 82 கிராமசேவகர்கள் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (21.06.2021)
Next articleபொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் திறப்பு!