எங்களை காப்பாத்துங்க! சிறையில் வாடும் ஈழத்தமிழர்களின் கண்ணீர் பேட்டி

பெருந்தொற்று போன்ற பல பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கி கொண்டுள்ளார்கள்.

அதிலும் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருக்கின்ற ஈழ ஏதிலிகள் சந்திக்கு பிரச்சினை என்பது முக முக்கியமாக கவனிக்க கூடிய விடயமாக உள்ளது.

இதுதொடர்பாக திருச்சி சிறப்பு ஏதிலிகள் முகாமில் உள்ள திரு பாஸ்கர் என்பவருடன் கலந்துரையாடிய போது பல விடயங்களை நமக்கு தெளிவிப்படுத்தி உள்ளார்.

தற்போது அவர் நேர்காணலில் கூறியவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கேள்வி – நீங்கள் தங்கியிருக்கு சிறப்பு ஏதிலிகள் முகாம் ( அகதிகள் முகாம்) என்றால் என்ன? யாரெல்லாம் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்? எப்படியான காரணங்களுக்காக அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள்?

பதில் – ஏதிலிகள் மூகாம் என்றால் சிறப்பு சிறை. அதாவது சுற்றிவர 150 – 200 மேற்பட்ட காவலர்கள், 35 மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மின்சாரம் பொருத்தப்பட்ட முற்கம்பி வேலிகள் போன்ற பல பாதுகாப்பு கருவிகள் எல்லாம் வைக்கப்பட்டு மிகுந்த பலத்த பாதுகாப்புடன் ஆயுதம் தாங்கிய பொலிசார்களுடன் பலத்த பாதுகாப்புடன் ஈழத்தமிழ் அகதிகள் 80, 83ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பலதரப்பட்ட காலப்பகுதியில் தமிழகம் வந்து இலங்கை அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்கள், வெளிநாடு செல்ல முயன்றார்கள், அப்படிப்பட்ட பாஸ்போட் … போன்ற சின்ன சின்ன வழக்குளில் கைது செய்யப்பட்டவர்.

கடந்த 10ஆண்டு ஆட்சிக்காலங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தமாக 80 பேருக்கு மேல் இங்கு தடுத்து வைத்துக்கப்பட்டுள்ளோாம். இதுவரை யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

இது 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துடைய சட்டத்தை பயன்படுத்தி இந்திய அரசு வெளிநாட்டாவர் சட்டத்தை பயன்படுத்தி உள்துறை அமைச்சரால் கைது செய்யப்பட்டு எங்களை வைத்துள்ளனர்.

ஆனால் இலங்கை அகதிகளுக்கு என்று ஒரு சட்டம் இங்கு இல்லை. அந்த சட்டத்தை கொண்டு வந்தது வெளிநாட்டவர்கள் கட்டுப்படுத்தும் சட்டமாக தேசவிரோத செயல்கள், சமூக விரோதிகள், பயங்கரவதிகளை கட்டுப்படுத்துறத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த சிறப்பு முகாம் என்றது செங்கல்பட்டு, பூந்தமல்லி போன்ற இடங்களில் முன்பும் இருந்தது. அங்கேயும் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் முன்பு இருந்தன.

இப்பொழுது கடந்த கால அரசு முகாமில் இருக்க கூடிய அனைவரையும் எந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் உடனடியாக பிணையில் வெளியில் வந்தாலும் சரி வழக்குகளில் இருந்து விடுதலையாகி வந்தாலும் சரி அல்லது வழக்கு பதிவு செய்தாலும் சரி அவர்களை உடனடியாக இந்த சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைக்கின்றனர்.

கேள்வி – அகதி முகாமில் இருப்பவர்களுக்கு நிதிமன்றங்களில் ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? வழக்குகள் நடந்து கொண்டுள்ளதா? அதற்கான வழக்குள் நிலுவையில் இருக்கா?

பதில்- 6 வருடங்கள் என்னை கைது செய்து எந்த வழக்கும் என் மீது இல்லை. ஆனால் என்னை விடுதலை பண்ணவில்லை. என்னை போன்ற பலர் விடுதலை பண்ண படாமல் வழக்குகள் முடிவுற்ற நிலையிலும் எந்த வழக்குகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பாஸ்போட் வழக்கில் கைது செய்யப்பட்ட நிதிமன்றம் பிணை கொடுத்தும் அவர் வெளியிலிருந்தும் வரும் போது கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள்.

மற்றும் 10 ஆண்டு காலமாகியும் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமால் வழக்கு விசாரணை எதுவும் நடத்தாமலும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள். மூன்று விதமாக ஆட்கள் இங்கு இருக்கிறார்கள்.

கேள்வி – இத்தனை காலமாக எந்தவொரு மனித உரிமை தளத்திலும் நீங்கள் அனுகவில்லையா?

பதில் – இந்த சிறப்பு சிறையை பொருத்தவரையில் வழக்கறிஞ்சரோ, மனித உரிமைகள் அமைப்புகள் சம்பந்தப்பட்ட எந்த அமைப்புக்களுக்கோ யாருமே இங்கே வர முடியாது. அதற்கு அனுமதி கிடையாது. உதாரணமாக அரசியல் தலைவர்கள் கூட உள்ளே வருவதற்கு அனுமதியில்லை.

அப்படிபட்ட சூழ்நிலையில் குடும்ப உறவுகள் கணவன், மனைவி , பிள்ளைகள் என்ற அவர்கள் தனியார் தவிர்ந்த மற்றவர்கள் காலையில் 10 மணிக்கு வந்தால் 4 மணி வரையும் பார்க்கலாம். அதுக்கு பிறகு சனி, ஞாயிறு பார்க்க முடியாது. உறவுகள் இல்லாத தனிமையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் சொந்தகாரர் இருந்தால் கூட பார்க்க முடியாது. அதற்கு அனுமதி இல்லை.

ஒரு நாளைக்கு 175ரூபா சாப்பாட்டிற்கு கொடுக்கின்றார்கள். அந்த பணத்தில் தான் நாங்கள் மருத்துவ செலவை பார்க்க வேண்டும். துணிகள் ஏதுவும் வாங்குவது என்று சொன்னால் வாங்க வேண்டும். சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி நிறைய பிரச்சினைகள் உண்டு. வேறு எந்தவிதமான உதவிகளும் இல்லை. மருத்துவ வசதி கூட இல்லாதா சூழ்நிலையில் தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். சுகாதார வசதி எதுவும் இல்லை.

கேள்வி – மிக நெருக்கடியாக நீங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை என்ன?

பதில் – கொரோனா தொற்றில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டு 7 நாட்கள் ஆகியும் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டும். அதிகாரிகள் எங்கள் நோய் தொற்றை பற்றி அக்கறை கொள்ளவில்லை.

நாங்கள் வாக்குவாதப்பட்டு தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்று 3 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். 3வது நாங்கள் எங்களை திரும்பி சிறைக்கு கொண்டு வர ஏற்பாடு பண்ணார்கள். நாங்கள் போக மாட்டோம். 14 நாள் இருந்து தான் போவோம். இல்லாவிடின் தொற்று எல்லோருக்கும் வந்துவிடும் சொன்ன பிறகு எங்களுக்கு கொடுக்கப்படும் உணவை நிறுத்தினார்கள். சட்டவிரோதமாக கொண்டுவந்து தான் எங்களை இங்கு அமைத்தார்கள்.

அதுக்கு பிறகு நாங்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் எங்கள் வெளியே குடும்பங்கள் எல்லாம் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் 175 ரூபாவில் அதில் மிச்சம் பிடித்து ஒருவேளை, இரண்டு வேளை உணவு சாப்பிட்டு தான் குடும்பத்திற்கும் அதில் ஏதாவது செய்து கொஞ்சம் கொடுத்து குடும்பத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

இந்தகாலக்கட்டம் என்பது எங்களுக்கு மிகவும் பாரதூரமாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் எங்களை விடுதலை பண்ணுங்கள், நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறோம். குடும்பத்தோடு இருந்து கொண்டு எங்கள் வழக்கு இருந்தால் வழக்கை பார்க்கிறோம். வழக்கு இல்லை என்று சொன்னால் நாங்கள் எந்த குற்றங்களையும் நாங்கள் செய்ய மாட்டோம்.

அல்லது இந்த நாட்டை விட்டு வெளிநாடு போக போகிறோம் என்றால் சட்ட ரீதியாக பதிவு செய்து போவோம் என்று எல்லாம் கேட்டு இருந்தோம். ஆனால் எதுக்குமே எந்த அதிகாரியுமே செவி சாய்க்கவில்லை. அதனால் நாங்கள் எங்களை விடுதலை செய்யும் வரை காலவறையற்ற போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி – காலவறையற்ற போராட்டம் எந்த அடிப்படையில் எவ்வாறான போராங்களை நீங்கள் முன்னேடுத்துள்ளீர்கள்?

பதில் – ஆரம்பத்தில் நாங்கள் உள்ளிருப்பு போராட்டமாக கடந்தவாரம் ஒரு நாள் அடையாளமாக செய்திருந்தோம். அதிகாரிகள் வந்து வாக்குறுதி கொடுத்தார்கள். 10நாட்கள் தவணை வேண்டும்.

நல்ல ஒரு முடிவு வரும் என்று. 10 நாட்கள் கழித்து நாங்கள் அவர்களை கேட்டபோது அது அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சின்ன ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மறுபடி நாங்கள் பேராட்டம் மேற்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஒரு முடிவு வரவில்லை என்றால் அதை இன்னும் உயர்த்தி உண்ணாவிரத போராட்ட வடிவமாக கொண்டு போகும் ஏற்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

கேள்வி – புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகளில் இந்த மாதிரியான கோரிக்கைகளை முன்வைத்து இருந்தீர்களா?

பதில் – நாங்கள் 2019 இருந்து புரட்சியான போராட்டங்கள் எல்லா போராட்டங்களையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளோம். புரட்சியான போராட்டங்கள் நடத்தினோம். தற்கொலை முயற்சிகள் செய்தோம், எல்லா உண்ணவிரத போராட்டங்களும் இருந்தோம். அப்படி இருந்தும் எல்லாத்திற்கு வாக்குறுதி கொடுத்தார்கள் இந்த 10 நாட்களில் விடுதலை பண்ணுவோம் போராட்டத்தை விடுங்க. 5 நாட்களில் விடுதலை பண்ணுவோம் என்று சொன்னார்கள்.

அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று நாங்கள் விட்டு கொடுத்து இருந்தோம். இதுவரைக்கு எந்த முடிவும் இல்லை.

கொரோனா காலக்கட்டங்களில் அந்த நேரம் நெருக்கடியான சூழ்நிலை என்பதால் அமைதியாக இருந்தோம். ஆனால் இந்த ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு எங்களின் மனநிலையை பாதிப்படைய செய்தது. இங்குள்ள அதிகாரிகள் எங்களை பார்த்த விதங்கள்.

ஒன்று இங்கே நாங்கள் சாகவேண்டும், இல்லை எங்களை விடுதலை பண்ண வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து கொண்டு போகிறோம்.

கேள்வி – இப்போ நீங்கள் தமிழக அரசுக்கு முன்வைக்கின்ற கோரிக்கை என்ன?

பதில் – கடந்த கால அரசு எங்களை மீது வஞ்ச போக்கை பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்து 10 வருடங்கள் கடந்து விட்டது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசு மதிப்புக்குரிய மான்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஐயா அவர்கள் மிகவும் ஈழத்தமிழ்கள் மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு மாற்று கருத்து கிடையாது.

அவர் உடனடியாக தலையிட்டு எங்களது விடுதலை தொடர்பாக ஒரு முடிவினை எடுத்து உடனடியாக எங்களை விடுதலை செய்து நாங்கள் குடும்பங்களுடன் வாழ்வதற்கான நல்ல வாழ்வினை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை