இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் (20) 52 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,633ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,41,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2,07,287 பேர் குணமடைந்துள்ளதுடன், 31,552 பேர் தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.