களுத்துறை பிரதேசத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

களுத்துறை – வரக்காகொட, பலிகந்த பிரதேசத்திலுள்ள வனப்பகுதி ஒன்றிலிருந்து மனித எலும்புத் துண்டுகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரது எச்சங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் குறித்த நபர் நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் திடீரென காணாமல் போனதாக அகலவத்தை பொலிஸாரிடத்தில் அவரது உறவினர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த வனப்பகுதிக்கு நபர் ஒருவர் சென்றபோது இவ்வாறு மனித எலும்புத் துண்டுகள் வீசிக்கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மேலும் குறித்த நபரின் உயிரிழப்பானது கொலையா அல்லது வேறு சம்பவமா என்பது தொடர்பில் வரக்காகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleஇன்றயை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உயர்வு!
Next articleகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள்!