சற்றுமுன் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் ஒருவர் சுட்டுக்கொலை!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் இது கைகலப்பாக மாறியது.

இந்த நிலையில் ,பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தரை அந்த நபர் தாக்கியதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

Previous articleகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள்!
Next articleநடிகர் கலைமாமணி அமரசிகாமணி திடீர் மரணம்!