வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 28 பேர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று!!

வவுனியா, மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 28 பேர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (19.06) வெளியாகின.

அதில் மறவன்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சமனங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியைச் சேர்ந்த சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,

பனிக்கர் புளியங்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் மூவருக்கும், கொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், நந்திமித்திரிகம பகுதியில் இருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் மூவருக்கும், பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவருக்கும், பாலமோட்டை பகுதியில் ஒருவருக்கும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், மதுராநகர் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், கிரிமத்தியவெவ பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

கெப்பற்றிகொலவ பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி நகர் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

உக்குளாங்குளம் பகுதியில் நால்வருக்கும், ஊர்மிளா கோட்டம் பகுதியில் நால்வருக்கும், நெளுக்குளம் பகுதியில் மூவருக்கும் என 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியா பொது வைத்தியசாலைக்கு விரைவில் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம்!
Next articleமக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவை போன்ற பேரழிவு உருவாவதை தடுக்க முடியாது!