வவுனியாவில் நேற்று இரு பெண்கள் கொரோனாவுக்கு பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் வவுனியாவில் நேற்று இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபப் பெண்ணொருவர் சிறுநீரக நோய் காரணமாக மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர், குருதி சுருதி சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, வவுனியா, சகாயாமாதாபுரம், வைரவர் கோயிலடிப் பகுதியில் வீடொன்றி நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே குறித்த ஏழுபேரில் வயோதிபப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்