கிளிநொச்சியில் 18 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குறித்த கிராமத்தினை சேர்ந்த 182 பேரிடம் பிசிஆர் மாதிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை கூடுதலாக அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.