இந்த மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மொத்தம் 53 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் கொவிட் கட்டுப்பட்டு செயலணி இன்று (திங்கட்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகளவிலான நோயாளிகள் அதாவது கம்பஹாவில் 10 ஆயிரத்து 248 பேரும் கொழும்பில் 10 ஆயிரத்து182 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் 5,096 பேருக்கும் இரத்தினபுரியில் 3,050 பேருக்கும் குருநாகலில் 2,979 பேருக்கும் காலியில் 2179 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கண்டியில் 2146 பேருக்கும் மட்டக்களப்பில் 2054 பேருக்கும் நுவரெலியாவில் 1939 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 1724 பேருக்கும் கேகாலையில் 1368 பேருக்கும் மாத்தறையில் 1330 பதுளையில் 1304 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Previous articleபயணக்கட்டுப்பாடு நீக்கம் – அனைத்து பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு
Next articleநாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும்!