ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள திருநங்கை!

நியூசிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

43 வயதான லோரல் ஹப்பர்ட் எனப்படும் குறித்த பெண், 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என நியூசிலாந்து ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

திருநங்கைகளும் ஒரு பெண் வீராங்கனையாக போட்டியிடலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுஅறிவித்ததையடுத்து, அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்கும் திருநங்கை என்ற பெருமை லோரலுக்கு கிடைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.