கொரோனா தொற்று காரணமாக யாழில் கடந்த 20 நாட்களில் 26 பேர் மரணம்!

யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியிருக்கும் சுகாதார பிரிவினர், 20 நாட்களில் 1770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் 4,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று ஜூன்-20 வரையான காலத்தில் யாழ். மாவட்டத்தில் 66 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.மேலும் யாழ்ப்பாணம், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.​

Previous articleகொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் அதிரடியாக முடக்கம்!
Next articleநடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் கவலை தரும் வகையில் மக்களின் செயற்ப்பாடு இருக்கின்றன!