கடலுணவு உண்பதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது – வீணான தேவையில்லை

கடலுணவு உட்கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் மோசமான வதந்திகள் பரப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தொிவித்திருக்கின்றார்.

இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார். எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில்

முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

என்றும் அவர் குறிப்பிட்டார்.