நாட்டில் விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்!

எரிபொருள் விலை அதிகரித்த படியினால் எரிபொருள் விநியோகச் செலவும் அதிகரித்திருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி மற்றும் வாகன உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது.

கடந்த 11ஆம் திகதியிலிருந்து டீசல் லீட்டரின் விலை 07 ரூபாவினால் அதிகரித்தபடியினால், அதன் நட்டம் தங்கள் மீதும் விழுந்துள்ளதாக அந்த சங்கம் கூறுகின்றது.

அதற்கமைய, தங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை சரியான முடிவு வராத காரணத்தினால் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருப்பதாக எரிபொருள் விநியோகஸ்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.