தொலைபேசி கொள்வனவிற்காக ஆசிரியர்களுக்கு கடனுதவி!

அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு டெப் அல்லது கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்காக நிவாரண அடிப்படையில் கடனுதவிகளை பெற்றுக்கொடுக்கின்றமை குறித்து அரச வங்கிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிக்கின்றார்.

மேலும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கு இணைய வழியான கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு மாணவர்கள் மாத்திரமன்றி, ஆசிரியர்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும் இதனை கருத்திற்கொண்டு, ஆசிரியர்களுக்கு தொலைபேசிகளை கொள்வனவு செய்ய கடனுதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.