இத்தாலியில் முகக்கவசங்கள் அணிவதில் தளர்வு!

இந்த மாத இறுதியுடன் முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை என இத்தாலி அறிவித்துள்ளது.

இதன்படி இத்தாலியில் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்த மாதம் 28 ஆம் திகதியின் பின்னர் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி இருந்தது.

எனினும் தற்போது அங்கு கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் 46 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.