கொரோனா நாட்களில் சராசரியாக கனேடியர் ஒருவரின் சேமிப்பு எவ்வளவு?

ரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில் சராசரியாக கனேடியர் ஒருவர் சேமித்துள்ள தொகை தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் தங்கள் குடியிருப்புகளில் மொத்தமாக முடங்கிப் போயினர். இதனால் தேவையற்ற செலவுகள் குறைந்ததுடன், அது சேமிப்பாக மாறியுள்ளது.

அந்த வகையில் சராசரியாக கனேடியர் ஒருவர் இந்த கோரோனா காலத்தில் சுமார் 5,000 டொலர் வரையில் சேமித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைகளுக்கான வருவாய் இன்றி தத்தளித்தனர். ஆனால் பலர் வங்கிகளில் தங்கள் சேமிப்பை குவித்தனர்.

2019ல் கனேடியர்கள் வங்கிகளில் சேமித்த தொகை 18 பில்லியன் டொலர்கள் என்றால், கொரோனா காலமான 2020ல் இந்த தொகை 212 பில்லியன் என அதிகரித்துள்ளது.

அதாவது சராசரியாக ஒரு கனேடியர் 2020ல் 5,574 டொலர் தொகையை சேமித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 2019ல் இந்த சேமிப்பு தொகையானது வெறும் 479 டொலர் என இருந்துள்ளது.

இந்த சேமிப்பு விவகாரம் வீட்டுக்கு வீடு மாறுபடும் என்றாலும், உங்கள் வேலையை நீங்கள் தக்கவைத்து, ஆரோக்கியமாக இருக்க முடிந்தால், இந்த கொரோனா காலத்தின் போது உங்கள் நிதி மேம்பட்டிருப்பதை நீங்கள் காணலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.