யாழில் மேலும் 4 கொரொனா இறப்புகள்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று 44 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 912ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநீங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா? இந்த பாதிப்புக்கள் எல்லாம் எளிதில் வந்து சேர்ந்து விடுமாம்
Next articleகனடாவில் கோர விபத்தில் இலங்கை குடும்பம் ஒன்று பரிதாபமாக பலி!