வவுனியாவில் பயணத்தடையை மீறிய குடும்பத்துக்கு நேர்ந்த கெதி!

வவுனியாவில் பயணத் தடையின் போது மீறி வெளியேறிச் சென்ற குடும்பம் ஒன்றின் வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வவுனியா, சகாயாமாதா புரம் மற்றும் அதனை அண்டிய சூசைப்பிள்ளையார் குளத்தின் ஒரு பகுதி என்பன இராணுவத்தினரதும், பொலிசாரினதும் பாதுகாப்பு போடப்பட்டு முழுமையாக கிராமத்தில் இருந்து எவரும் வெளியேறிச் செல்லாமல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூசைப்பிள்ளையார்குளம், வைரவ கோவிலடிப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசார் ஆகியோரின் அனுமதியைப் பெறாது பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும், பொலிசாருக்கும் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் வசித்து வந்த குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.