கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பு!

கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவிற்கு அமைய தடுப்பூசிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்ய வேண்டும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தில் தாமதத்தை அவதானிக்கக்கூடியதாய் உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்துக் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இதனை செயற்படுத்தவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை குறித்த அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.