முடக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பி ஓடிய குடும்பம்!

முடக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பி ஓடிய குடும்பம்! சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டதுடன், உடனடியாக சட்ட நடவடிக்கை..
அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து வவுனியா – சகாயமாதாபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் முடக்கப்பட்டு உட்செல்லவும், வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், சூசைப்பிள்ளையார்குளம், வைரவ கோவிலடிப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசார் ஆகியோரின் அனுமதியைப் பெறாது முடக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும், பொலிசாருக்கும் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் வசித்து வந்த குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும்