பொசன் தினத்தை ஒட்டியதாக 17 முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு

பொசன் போயா தினத்தை ஒட்டியதாக விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைசெய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் மிக நீண்ட காலம் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டணை காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர்

என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous articleமுடக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பி ஓடிய குடும்பம்!
Next articleயாழில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா!