யாழில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா!

யாழில் 78 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் கூறியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 78 பேருடன் மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 5,331 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி 09 ,முல்லைத்தீவு-05, வவுனியா -22 மற்றும் மன்னாரில் 02 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.