கொரோனாவால் உயிரிழந்த 700 இற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் அடக்கம்!

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று (22.06.2021) மாலை வரை 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று 22.06.2021 வரை 690 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன்; 15 இந்து உடல்களும், 15 கிறிஸ்தவ உடல்களும்; 07 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

Previous articleதமிழ்க் கைதிகள் 07 பேர் இந்த வாரத்திற்குள் விடுதலை!
Next articleகளத்தில் இறக்கப்படவுள்ள 20 ஆயிரம் பொலிஸார்!