சினிமா பாணியில் ரணில்; “Im Back” வைரலாகும் பதாகைகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நிலையில் ரணிலுக்கு ஆதரவாக “im back” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் முன்னால் இந்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அப்பகுதியில் குறித்த நிறுவனத்தின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவது வழமை.

அந்த இடத்திலேயே குறித்த ஊடக நிறுவனத்தின் பெயருடன் ரணிலின் ஒளிப்படம் தாங்கியவாறு “im back” என்ற வாசகம் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Previous articleகளத்தில் இறக்கப்படவுள்ள 20 ஆயிரம் பொலிஸார்!
Next articleகொரோனா கட்டுப்பாட்டை மீறி இடம்பெற்ற வேள்வியும் நடாத்திய வடமராட்சி ஆலயம்!