கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேலிருந்து வாவியில் குதித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இளைஞரை காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் களுவாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பாலத்தின் அருகில் இளைஞர் கொண்டுவந்த பை,பாதணி என்பவற்றை கழற்றி வைத்து விட்டு பாலத்தின் மேலிலிந்து வாவிக்குள் குதித்துள்ளார்.

இதன்போது அந்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக இளைஞரைக் காப்பாறி மட்டு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மேலும் இந்த தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.