யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 919ஆக அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த தொற்றாளர்களில் 3 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.மேலும் தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது!
Next articleஇலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!