எம்மால் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்!

கொவிட் கட்டுப்பாட்டிற்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை வழங்கியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

களுத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்காவிடின் நாட்டை காப்பாற்றுவது கடினம் என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இது தொடர்பில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

முதலாவது மற்றும் இரண்டாவது கொவிட் அலையினை கட்டுப்படுத்தியது போல மூன்றாவது கொவிட் அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான பணி அல்ல என தெரிவித்த அமைச்சர் எம்மால் நாட்டை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.