வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிப் பள்ளத்திற்குள் பாயந்த முச்சக்கரவண்டி!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமன்றி அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் இருந்து பெரியார் குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி பூந்தோட்டம் ஆறுமுகநாவலர்சிலை அருகில் சென்றுகொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையிலிருந்த பள்ளத்தினுள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களிற்கு எதுவித காயங்களும் ஏற்படாத நிலையில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியது.

அதிக வேகமே விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Previous articleகருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளை யாக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க
Next articleஇலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்!