சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களிடம் 50 ஆயிரம் ரூபா தண்டம்!

சிறிலங்காவில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும் 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50, 000 ரூபாவாக அதிகரித்தாவது கொவிட் ஒழிப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

களுத்துறை நாகொட வைத்தியசாலை ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் தொற்றை ஒழித்து, நாட்டை பாதுகாப்பதற்கான இயலுமை எமக்கு உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த இயலுமானதாக இருந்தால், மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியம் அல்லவென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த இலக்கை அடைவதற்காகவே அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தேவைப்பாட்டையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Previous articleதொற்றாளர் எண்ணிக்கையில் 5000 ஆயிரத்தை நெருங்கியது யாழ்ப்பாணம்!
Next articleஇணையவழிக் கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!