இரண்டு குழந்தைகளில் சடலங்கள் மீட்பு – பண்டாரவளை, முல்லேரியாவில் கொடூரம்!

நாட்டில் இருவேறு இடங்களில் இருந்து தலையில்லாத இரண்டு குழந்தைகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவளை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பண்டரவளை, எல்ல – கரண்டகொல்ல பகுதியில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற குழந்தையின் உடல் முல்லேரியாவில் உள்ள கெலனி நதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகளின் உடல் பொலித்தீன் பையில் போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.