கொரோனா நீங்க வேண்டி யாழ். நாக விகாரையில் வழிபாடு!

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு இன்று (23) யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி இலங்கையின் எட்டுத் திசையிலும் உள்ள விகாரைகளில் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இரவு 7.11 மணிக்கு 108 தீபங்கள் ஏற்றி பிரித் ஓதி பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக இன்று யாழ்ப்பாணம் நாக விகாரையிலும் வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.