வவுனியாவில் பொது மக்களின் வீடுகளுக்கு சீல் வைக்கும் பொலிஸார்!

வவுனியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு தற்காலிகமாக செல்கின்றனர்.

இதனால் அவ்வாறு செல்லும் மக்களின் வீடுகளுக்கு சீல் வைப்பதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணங்களில் தங்கள் வீடுகளை கைவிட்டு செல்வதுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத பகுதியில் தங்கள் உறவினர்களின வீடுகளுக்கும் செல்கின்றனர்.

இதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் அங்கிருந்து தற்காலிக இடம் தேடி சென்ற வவுனியா மக்களுக்கு சொந்தமான நான்கு வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட வீடுகளுக்கு எந்த நபரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.