இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய அறிவித்தல்!

நாடு முழுவதும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை 25ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.