யாழில் பயணத்தடையிலும் அடங்காத மணல் கொள்ளையர்கள்; வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் ஏற்றுவதில் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது.

மணல் ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது. சம்பவத் தில் 50 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும் மணற்கொள்ளையர்களின் கொட்டம் அடங்கவில்லை என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.