சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் பிணை இல்லை!

நாட்டில்பயணக்கட்டுப்பாடு நேற்று (23) இரவு 10 மணிமுதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இதனை இன்று (24) தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் மற்றும் சீல் வைக்கப்படும்.

பௌர்ணமி தினமான இன்று (24) மக்கள் வீடுகளிலேயே இருந்து தனிமைப்படுத்தல் விதிகளுக்கு மதிப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.