மேலும் சில கடலாமைகள் கரையொதுங்கின!

நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் (23) இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின.

நேற்று (23) காலை மொரட்டுவை – லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல் வேளையில் முரவத்த பகுதியில் மற்றுமொரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது.

களுத்துறை வடக்கு பகுதியிலும் காலி – கொஸ்கொட, நாபே பகுதியிலும் கடலாமைகள் இறந்துள்ளன.

இதேவேளை, ஹிங்கடுவையில் நேற்று இறந்த நிலையில் மீன்களும் கரையொதுங்கியிருந்தன.

நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கல்முனை – பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

முந்தல் – சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலமை கரையொதுங்கியுள்ளது.

எகஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இதுவரையான காலப்பகுதில் சுமார் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.