சிறைச்சாலை வாகனத்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல் கைதிகள்!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் பேருந்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதுமிந்த சில்வா போல் எம்மையும் விடுதலை செய்யவேண்டும் கைதிகள் உண்ணாவிரதம் போராட்டம்!
Next articleலண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி!