முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு ஆறுமுகத்தான் குள கிராமத்தில்; இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆறுமுகத்தான் குளக் கிராமத்தின் வெற்று காணியில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இன்று காலை இனம் காணப்பட்டுள்ளது.

அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்