மெக்கஃபே ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் தலைவர் சிறையில் தற்கொலை!

மெக்கஃபே ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் தலைவர் சிறையில் தற்கொலை!உலகம் முழுவதும் பிரபலமான மெக்கஃபே என்ற ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் மெக்கஃபே, ஸ்பெயின் நாட்டின் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

அமெரிக்காவை சேர்ந்த ஜான் மெக்கஃபே, மெக்கஃபே என்ற ஆண்டிவைரஸ் நிறுவனத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 77 வயதான இவர் 2014 முதல் 2018 வரையிலான வருமானத்திற்கு முறையான வரி கட்டவில்லை என அமெரிக்க அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார்

ஸ்பெயின் நாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மெக்கஃபேவை தங்கள் நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து ஸ்பெயின் நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அமெரிக்காவுக்கு சென்றால் வரி ஏய்ப்பு குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென நேற்று ஸ்பெயின் நாட்டின் சிறையில் ஜான் மெக்கஃபே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Previous articleதடுப்பூசி போட்டால்தான் மாத சம்பளம்; அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
Next articleயாழில் ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று உறுதி!