யாழில் ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 40 பேர் உட்பட வடக்கில் நேற்றய தினம் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தொிவித்துள்ளது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் கரவெட்டியில் 20 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாயில் 4 பேருக்கும், தெல்லிப்பழையில் 3 பேருக்கும், உடுவிலில் 2 பேருக்கும்,

நல்லுாரில் 4 பேருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும், யாழ்.மாநகரில் 5 பேருக்கும். காரைநகரில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.