பசில் அமைச்சராகி எரிபொருள் விலை குறைப்பார்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ அடுத்தமாத முதல் நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அரச உயர்மட்ட நம்பகரமான தகவல்கள் இதனை தெரிவித்தன.

பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வர, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், ரஞ்சித் பண்டார, ஜயந்த கெட்டகொட ஆகியோர் பதவிவிலகி இடமளிக்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் நிதியமைச்சர் பதவியும் அளிக்கப்படவுள்ளது.

அதன் பின்னரே எரிபொருள் விலை குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.