இன்று அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு தளர்வு!

நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாள் தோறும் 2,000 மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.