சட்டவிரோத ஓட்டப் பந்தயம்:இருவர் பலி

குருணாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய உந்துருளி மற்றும் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உந்துருளியும் மகிழுந்தும் நேற்று வியாழக்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்த பாதையின் ஊடாக குருணாகலை நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது குறித்த மகிழுந்தில் 5 பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

மகளின் பூதவுடலுக்காக கதறும் தாய்:மனிதம் எங்கே?

மின் தடைக்கு காரணம் அணில்:சிக்கியது ஆதாரம்

இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில், சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட ஓர் நாளிலே 11 க்கும் அதிகமான விபத்துகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி!
Next articleஇலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவ தளபதி!