போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

திருச்சி – மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , தம்மை விடுவிக்கக் கோரி இவர்கள் தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழகத்தின் கே.கே நகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், அங்குள்ள இலங்கைத் தமிழர்கள், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous articleநாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது!
Next articleஆற்றில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; இருவர் பலி!