ஆற்றில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; இருவர் பலி!

இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.