தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ள கப்பலில் இருந்து ஒருவர் மாயம்!

கொழும்பு கடற்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ள கப்பலில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவயதான தாயை கவனிக்க தவறிய அரச ஊழியர்களான பிள்ளைகள்!
Next articleகொழும்பில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த நபர்!