கொழும்பில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த நபர்!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் கடன் தொல்லையால் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ராமவிக்ரம குணபால என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

“எனக்கு நிறைய கடன் பிரச்சினை உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு யாரும் உதவுவவதில்லை” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இந்த கடிதம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் மகன் மற்றும் மகள் திருமணமாகி வேறு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மனைவியின் காணியை விற்பனை செய்து பணம் வழங்குமாறு குறித்த நபர் தொடர்ந்து கோரி வந்த நிலையில், அவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஹோமாகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.